பொலிஸ் அதிகாரிகளுக்கு பின்னால் மறைந்திருக்கும் பாரிய குற்றவாளிகள் - வெளியான அதிர்ச்சித் தகவல்
நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், பொலிஸ் பிரிவுகளுக்குள் ஊடுருவியுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன(Ravi Senaviratna) தெரிவித்துள்ளார்.
சில பொலிஸ் அதிகாரிகள் அந்தக் கும்பல்களுக்கு இரையாகிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “சட்டம் நடைமுறைப்படுத்தாவிட்டால் நமக்கு அமைதியே இருக்காது.
அவைதான் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளாகும். சட்டத்தை நடைமுறைப்படுத்துவன் மூலம் மட்டுமே நாம் அமைதியை நிலைநாட்ட முடியும்.
முக்கிய காரணங்கள்
இன்று நாம் அமைதியை நிலைநாட்ட முடியாததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், மற்றொன்று போதைப்பொருள்.
இந்த இரண்டையும் அடக்குவதில் நாம் எதிர்கொள்ளும் பல சிக்கல்கள் உள்ளன. இந்த ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்கள் நம் மத்தியிலும் ஊடுருவியுள்ளன.
எங்கள் அதிகாரிகளும் அவர்களால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சு
குற்றங்களை எதிர்த்து போராடுவதில் சிறந்து விளங்கிய பொலிஸ் அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 17 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கர் அனுராதா ஸ்ரீராமின் கணவரை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam
