நீலங்களின் சமர் சமநிலையில் முடிவு (Video)

Kilinochchi Cricket
By Sudaron Jun 12, 2022 05:32 AM GMT
Report

வடக்கு நீலங்களின் சமர் போட்டியில் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி வெற்றிபெற்று களத்தடுப்பை தெரிவு செய்யது.

போட்டிக்கு தயாரான இரு அணியினரையும் விருந்தினர்கள் கைலாகு கொடுத்து வாழ்து தெரிவித்தனர். தொடர்ந்து குழுப்படம் எடுக்கப்பட்டதை அடுத்த போட்டி ஆரம்பமானது.

கிளிநொச்சி மகா வித்தியாலயம்


பார்வையாளர்களின் வரவேற்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக ஆரம்பமான குறித்த போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம் 50.2 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 181 ஓட்டங்களைப் பெற்று அனைத்து இலக்குகளையும் இழந்தனர்.

நீலங்களின் சமர் சமநிலையில் முடிவு (Video) | Cricket Match In North Province Srilanka

துடுப்பாட்டத்தில் மத்திய மகாவித்தியாலயம் சார்பில் தஜீபன் 41 (48 பந்துகளில்), பாவலன் 27(125 பந்துகள்) பந்து வீச்சில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி சார்பில் தமிழ்ப்பிரியன் 4 இலக்குகளையும், ஹரிசாந் 3 இலக்குகளையும் பெற்றனர்.

கிளிநொச்சி இந்துக் கல்லூரி

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடும் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி இன்றைய நாள் ஆட்டம் இடை நிறுத்தப்படும் வரை 32 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 4 இலக்குகளை இழந்து 94 ஓட்டங்களை பெற்ற நிலையில் முதல்நாள் ஆட்டம் நிறைவடைந்தது.

இரண்டாம் நாளான இன்று தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 52.5 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 140 ஓட்டங்களைப் பெற்று அனைத்து இலக்குகளையும் இழந்தனர்.

நீலங்களின் சமர் சமநிலையில் முடிவு (Video) | Cricket Match In North Province Srilanka

துடுப்பாட்டத்தில் இந்துக் கல்லூரி அணி சார்பில் பகலவன் 38 ஓட்டங்களையும், கிருசாந்தன் 34 ஓட்டங்களையும் அதிக பட்சமாக பெற்றனர்.

பந்து வீச்சில் அபிராஜ் மற்றும் பிரதாப் ஆகியோர் தலா 3 இலக்குகளை வீழ்த்தினர். பதிலுக்கு தமது இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய மத்திய மகாவித்தியாலய அணியினர் 26.5 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 158 ஓட்டங்களுக்கு 8 இலக்குகளை இழந்திருந்த வேளை தமது ஆட்டத்தை இடைநிறுத்துவதாகக்கூறி 200 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயத்திருந்தனர்.

200 என்னும் வெற்றி இலக்கு நோக்கி துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி 36 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 108 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.

நீலங்களின் சமர் சமநிலையில் முடிவு (Video) | Cricket Match In North Province Srilanka

சிறந்த துடுப்பாட்ட வீரனாக மத்திய மகாவித்தியாலய அணியின் பாவலனும், சிறந்த பந்துவீச்சாளராக கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணியின் தமிழ்ப்பிரியனும், சகலதுறை வீரராக கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய அணியின் பிரதாப் தெரிவானதுடன், போட்டியின் ஆட்ட நாயாக கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணியின் கிரிசாந்தன் தெரிவாகினர்.

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US