மயிலத்தமடுவில் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகும் பசுக்கள்!
மயிலத்தமடுவில் மேச்சலுக்காகச் சென்ற பசுக்கள் துப்பாக்கிச்mசூட்டுக் காயங்களுடன் திரும்பியுள்ளதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மைலத்தமடு, மாதவனை மேச்சல் தரைப் பிரச்சனை மிக நீண்டகாலமாக நிரந்தரத் தீர்வின்றி தொடர்கதையாகவே நகர்ந்து கொண்டிருக்கின்றது.
இதனால் அப்பகுதியில் காலா காலமாக கால்நடைகளை வளர்த்து வரும் பண்ணையாளர்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியிலும், அச்சத்தின் மத்தியிலும் அவர்களது வாழ்வாதாரமாகவுள்ள கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.
துப்பாக்கிச் சூடு
கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தான் மனித உரிமை ஆணைக்குழுவினர், சட்டத்தரணி, மனித உரிமை ஆர்வல்கள், அரச உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் அப்பகுதியக்கு நேரடி விஜயம் செய்து நிலமையை நேரில் பார்த்தது அறிந்திருந்ததோடு, பண்ணையாளர்களிடமும் கேட்டறிந்து கொண்டு வந்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று(14.10.2026) இரவு மேய்ச்சலுக்காகச் சென்ற பசுக்கள் இன்று(15.10.2026) காலை துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் திரும்பி வந்துள்ளதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எமது மேய்ச்சல்தரைப் பகுதியில் அத்துமீறி வெளி மாவட்டங்களிலிருந்து வந்து சட்டவிரோதமான முறையில் நிலப்பகுதியை ஆக்கிரமிப்புச் செய்து பயிற்செய்கையில் ஈடுபட்டுவருபவர்கள் இவ்வாறு துப்பாக்கிகொண்டு எமது வாய்பேச முடியாத பசுக்களை இவ்வாறு தினம் தினம் சுட்டுக் கொண்டே வருகின்றார்கள்.
நாங்கள் வாழ்வதா, எமது கால்நடைவளர்ப்பு வாழ்வாதாரத்தை மேற்கொள்வதா என தெரியாதுள்ளதாக அப்பகுதி கல்நடை வளர்ப்பாளர்கள் அங்கலாய்க்கின்றனர்.
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri