இலங்கையில் பால் உற்பத்தி தொடர்பில் கால்நடைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
நாட்டில் கால்நடைகளுக்கு சரியான ஊட்டச்சத்து இல்லாமை, கால்நடை தீவனத்தின் விலை அதிகம் போன்ற பல்வேறு காரணங்களால் தினசரி பால் உற்பத்தி குறைந்துள்ளததாக விவசாய அமைச்சின் கால்நடைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், முக்கிய உள்ளூர் பால் நிறுவனங்களான 'மில்கோ', தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை மற்றும் தனியார் துறைக்குச் சொந்தமான 'பெலவத்த' பால் உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கடந்த 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு பால் உற்பத்தி அதிகரிக்கும்.
கடந்த ஆறு மாதங்களில் தேசிய கால்நடை மேம்பாட்டு வாரியம் பசுவின் பால் உற்பத்தியை 2,599,617 லீற்றராகவும், தனியார் நிறுவனமான மில்கோ நிறுவனம் 19,152,766 லீற்றராகவும் அதிகரித்துள்ளது.
விற்பனை செய்ய முடியாத நிலை
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த தொகை சுமார் 30 வீத அதிகரித்துள்ளதாக பால் உற்பத்தி நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் 'பெலவத்த' பால் நிறுவனத்தின் தலைவர் ஆரியசீலி விக்ரமநாயக்க கூறுகையில்,
திரவ பாலை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் 500 மெற்றிக் தொன் முழு கொழுப்புள்ள பால் மாவை தற்போது விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளதாக கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |