இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது கோவிட் தொற்றாளர் விடுக்கும் கோரிக்கை
கோவிட் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் நான்காவது தடுப்பூசி செலுத்தப்பட்டாலும் அதனை பெற்றுக்கொள்ளுவதற்கும் தான் ஒரு போதும் பின்வாங்கப்போவதில்லை என இலங்கையின் முதலாவது கோவிட் தொற்றாளர் ஜயந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதுவரையில் மக்கள் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்கு ஆர்வம் காட்டமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டபோது, மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தொழில்நுட்பம் மேம்பட்டு அதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் மரணத்தைத் தவிர்க்க இதுபோன்ற தடுப்பூசி போடப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஏனைய நாட்டு மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள அரசாங்கத்தை பின்தொடர்ந்து செல்ல வேண்டியுள்ள நிலையில் எமது நாட்டு அரசாங்கம் உரிய தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு மக்களை வற்புறுத்த வேண்டியுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு மக்கள் காட்டிய ஆர்வம் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ள காட்டுவதில்லை என்பது வருத்தத்திற்குரிய விடயமாகும்.
பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டதன் பின்னர் எனக்கும் எலும்பு வலி மற்றும் சிறு உபாதைகள் ஏற்பட்டது. எனினும் அது சாதாரண ஒரு நிலைமையாகும்.
அச்சமின்றி பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளுங்கள்.
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வரும் இவ்வேளையில், நாட்டை மீட்டெடுக்காமல் முறையான சுகாதார நடைமுறைகளைப் பேணி, பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது எமது அனைவரினதும் கடமையாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
