தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் நான்கு நாட்களாக ஸ்தம்பிதம்
கோவிட் நோய்த் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் கடந்த நான்கு நாட்களாக ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 11ஆம் திகதி முதல் நேற்றைய தினம் வரையில் கோவிட் தடுப்பூசி எவருக்கும் ஏற்றப்படவில்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 10ஆம் திகதி இறுதியாக 66 பேருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
தொற்று நோய்ப் பிரிவினால் வெளியிடப்படும் ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இதுவரையில் 925242 இலங்கையர்களுக்கும், 2469 சீனப் பிரஜைகளுக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடுப்பூசி பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தாமத நிலைமைகளினால் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
