நாட்டின் சில பகுதிகளை தனிமைப்படுத்துவது குறித்து வெளியான தகவல்
புதிய கோவிட் கொத்தணிகள் கண்டறியப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்துவது குறித்து பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தகவல் வெளியிட்டுள்ளார்.
அதன்படி குறித்த பகுதிகளை தனிமைப்படுத்த உடனடித் திட்டம் எதுவும் இல்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் நேற்றைய தினம் அவர் மேலும் கூறுகையில்,
வைரஸ் பரவுவதால் ஏற்படும் ஆபத்து மற்றும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்கள் உட்பட குறைந்தது ஐந்து மாவட்டங்களில் புதிய கொவிட் கொத்தணிகள் தோன்றியுள்ளன.
இந்த நிலையில் அனுமதி பெறாத நிகழ்வுகள் நடத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறான ஒன்றுகூடல்கள் தவிர்க்கப்படுமானால் நாட்டை மீண்டும் மூட வேண்டிய நிலை ஏற்படாது என சுட்டிக்காட்டியுள்ளார்.





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
