பயணத்தடை தளர்த்தப்படுவது குறித்து இன்று அமைச்சரவை பேச்சாளர் கூறியுள்ள விடயம்
இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை தளர்த்தப்படுவது தொடர்பில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரும் 21ஆம் திகதி தளர்த்தப்படுமா என்பது தொடர்பில் 19 அல்லது 20ஆம் திகதியளவிலேயே முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
21ஆம் திகதி பயணத்தடை தளர்த்தப்பட வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பு. ஆனால் அது பற்றி தற்போதே முடிவெடுக்க முடியாது.
அனைத்து காரணிகள் பற்றியும் ஆராய வேண்டும். அந்தவகையில் 19 அல்லது 20ஆம் திகதியளவில் இது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
