முழுநேர ஊரடங்கை அமுல்படுத்த தீவிரமாக ஆராய்கிறதா அரசு? வெளியாகியுள்ள தகவல்
இலங்கையில் வார இறுதி நாட்களில் முழுநேர ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்த அரசு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கொழும்பு ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கோவிட் தொற்று அபாய நிலைக்கு சென்றுள்ளதாக பலர் தமது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றன.
இந்த நிலையில் நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், இன்று முதல் இரவு நேரங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமுல்படுத்துவது தொடர்பிலும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே நாட்டில் வார இறுதி நாட்களில் முழு நேர ஊரடங்கை அமுல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சில வழிகாட்டல்களை சட்டமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளது.
அதில் கோவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான சில சட்டங்கள் காணப்படுவதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை வார இறுதி நாட்களில் முழுநேர ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதற்கு அரசு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அறியமுடிகிறது.
நாட்டில் டெல்ட்டா வைரஸ் பரவல் காரணமாக நாளாந்தம் 150இற்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகிவரும் பின்னணியில் இவ்வாறு கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் வார இறுதி நாட்களில் முழுநேர ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri