இலங்கையில் அமெரிக்கா, இந்தியாவை மிஞ்சிய கோவிட் மரணங்கள் - பகுப்பாய்வில் அதிர்ச்சி தகவல்
இலங்கை தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தரவு பகுப்பாய்வொன்றின் மூலம் அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி கோவிட் தொற்றுக்கு உள்ளாவோர் மற்றும் கோவிட் தொற்றால் உயிரிழப்போர் வீதத்தில் இலங்கையானது அமெரிக்கா, பிரித்தானியா, சிங்கப்பூர், பூட்டான், நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் உயர்மட்டத்தில் உள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த விடயத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், நாட்டில் காணப்படுகின்ற இந்த பாரதூரமான நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்படுத்த தற்போது முன்னெடுக்கப்படுகின்ற கோவிட் பரிசோதனைகளின் அளவு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போதுமானதாக அமையாது.
இந்த தரவு பகுப்பாய்வின் ஊடாக கோவிட் பரவைல கட்டுப்படுத்தல் தொடர்பிலும் தடுப்பூசி வழங்கல் தொடர்பிலும் தொற்று நோயியல் பிரிவு மற்றும் அரசாங்கம் என்பன ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் கீழ் மட்டத்தில் இருப்பது வெளிப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
