உயர் அதிகாரிகளுடனான நேற்றைய கூட்டத்தில் முடக்கம் குறித்து ஜனாதிபதி தெரிவித்துள்ள விடயம்
இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில், உயிரிழப்புக்களும் தாறுமாறாக எகிறி நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பே ஆடிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதால் நாட்டை முடக்குவதற்கான அல்லது பகுதியளவில் முடக்குவதற்கான அறிவிப்பை வெளியிடுமாறு பல தரப்பும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அழுத்தம் பிரயோகித்துள்ளனர்.
இந்நிலையில், முடக்கம் தொடர்பில் இன்று முடிவெடுக்கப்படும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கோவிட் செயலணியின் கூட்டம் வழமையாக வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் நிலையில் நேற்று விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
நேற்று மாலை ஆரம்பித்த கலந்துரையாடல் முன்னிரவு வரை நீடித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற சுகாதாரத் தரப்பினர் நாட்டை முடக்காவிட்டால் உயிரிழப்புக்கள் உச்சத்தை தொடும் என்று எச்சரித்துள்ளன.
ஆகக் குறைந்தது ஒரு மாதத்துக்காவது நாட்டை முடக்கவேண்டும் என்று அரசுக்கு கடுமையான அழுத்தத்தைப் பிரயோகித்துள்ளன.
நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் பெருமளவு தொற்றுக்குள்ளாவதால் எதிர்காலத்தில் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதிலும் ஏனைய நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதிலும் பெரும் சவாலை எதிர்கொள்ள நேரிடும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலைமை நீடித்தால் மருத்துவக் கட்டமைப்பு முடங்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், கடும் வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்றுள்ளன.
இதனால் உறுதியான தீர்மானம் எதுவும் நேற்றைய கலந்துரையாடலில் எட்டப்படவில்லை. இதேவேளை, கோவிட் தடுப்புச் செயலணியின் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதன்போதே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை நாட்டை மூடுவது தொடர்பாக தான் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
