ஜனாதிபதியுடன் உயர் அதிகாரிகள் அவசர சந்திப்பு - நாடு முடக்கப்படுவது குறித்து தீர்மானிக்கப்படுமா?
நாட்டில் கோவிட் அச்சுறுத்தல் அபாய கட்டத்தை நோக்கி நகர்ந்து வருவதாக கூறப்படும் நிலையில் ஜனாதிபதியுடன் உயர் அதிகாரிகள் அவசர சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் தற்போது குறித்த விசேட சந்திப்பானது இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது.
இந்த சந்திப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் சுகாதாரப் பிரிவின் உயர் அதிகாரிகள் குழு உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
தற்போதைய கோவிட் தொற்று நிலைமை குறித்து எடுக்கப்படவேண்டிய முக்கிய தீர்மானங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை சுகாதார தரப்பினை சேர்ந்த பலரும் நாட்டை முடக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி வரும் சந்தர்ப்பத்தில் சிலர் பயணக்கட்டுப்பாடுகளையாவது விதிக்குமாறு ஆலோசனை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.