நாடு உடன் முடக்கப்பட்டாலும் 10 நாட்களில் கோவிட் பரவல் விதியை மாற்ற முடியாதென எச்சரிக்கை
இலங்கையின் முழு மருத்துவத்துறையும் நெருக்கடியில் உள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று தமது பிரதான செய்தியில் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உடனடியாக முடக்கப்பட்டாலும் கூட எதிர்வரும் 10 நாட்களில் கொவிட் வைரஸ் பரவும் விதியை மாற்ற முடியாது என்று முன்னணி மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளாக மேற்கோள்காட்டி குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நாடு தழுவிய முடக்கலை விதிக்க இன்னும் எந்த முடிவும் இல்லை. ஆனால் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடு தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
டெல்டா மாறுபாடு எந்த மாகாணங்களில் பரவியுள்ளது என்பதை அடையாளம் காண வைத்தியர்கள், இப்போது வரிசைப்படுத்தலை அதிகரித்துள்ளனர்.
அத்துடன் டெல்டா பிளஸ் தொடர்பாகவும் அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். டெல்டா மாறுபாடு மிகவும் அதிகமாக இருக்கும் போது இயற்கையாகவே அது உருமாறி டெல்டா பிளஸ் ஆகிறது.
இலங்கையில் இது இன்னும் கண்டறியப்படவில்லை. எனினும் மருத்துவர்கள் விழிப்புடன் நிலைமையை கண்காணித்து வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் படி, ஒரு நாளைக்கு 2,500 முதல் 2,800 நோயாளிகள் என கண்டறியப்பட்டாலும் அந்த எண்ணிக்கை 4,000மாகக் கூட இருக்கலாம்.
இப்போது பதிவாகியிருப்பது சுமார் 8 முதல் 10 நாட்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட நோயாளிகளாகும். மேல் மாகாணத்திலும் கராப்பிட்டிய போதனா மருத்துவமனையிலிருந்தும் டெல்டா மாறுபாடு நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி, நுவரெலிய, பதுளை, கேகாலை, அனுராதபுரம், பொலன்னறுவை போன்ற மாவட்டங்களில் இன்னும் டெல்டா பரவல் அறிவிக்கவில்லை.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
