கோவிட் தொற்றை தடுப்பதற்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு கிடைத்த கௌரவம்
கோவிட் வைரஸ் தொற்று நோயை யாழ்ப்பாண குடாநாட்டில் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் பணியாற்றியவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடித்துவக்கு (Jagath Kodithuwakku) தலைமையில் இன்று மதியம் ஒரு மணியளவில் தல்செவன இராணுவ விடுதியில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில், 29 வைத்திய அதிகாரிகள், 86 சுகாதார பரிசோதகர்கள், 210 குடும்பநல உத்தியோகஸ்தர்கள் ஆகியோரின் சேவையினைப் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா, யாழ் மாவட்ட தொற்று நோய் தொடர்பான வைத்திய நிபுணர் பரணிதரன்,சுகாதார பிரிவின் வைத்திய அதிகாரிகள்,பொது சுகாதார பரிசோதகர்கள், படைப் பிரிவுகளின் தலைவர்கள், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan