கொழும்பில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற வைத்தியர்களுக்கு கொவிட் தொற்று
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரண்டு தடுப்பூசிகளும் பெற்ற வைத்தியர்கள் இருவர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
கொவிட் தொற்று மீண்டும் வேகமாக பரவும் நிலைமையை கருத்திற் கொள்வதற்காக இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என விசேட வைத்தியர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் மூன்று நோயாளிகளில் ஒருவர் ஒக்ஸிஜன் தேவையுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கட்டமைப்பினால் தாங்கிக் கொள்ள முடியாத மட்டத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சில வார்டுகள் மிகவும் நெரிசலாக உள்ளது, கொவிட் நோயாளிகள் ஒருபுறம் மற்றும் தொற்று இல்லாத நோயாளிகள் மறுபுறம் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். .
கொவிட் தொற்றாளர்கள் மற்றும் ஏனைய நோயாளிகள் ஒரே கழிப்பறை மற்றும் உணவு உற்கொள்ளும் இடம் என்பவற்றை பயன்படுத்தும் சூழலுக்குள் நோயாளிகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
அத்துடன் ஒக்ஸிஜனுடனான கட்டில்கள் அனைத்தும் நிரம்பியுள்ளமையினால் கடும் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
