இலங்கையில் பதிவாகிய 618 ஆவது கோவிட் மரணம்
இலங்கையில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 618 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, பிட்டபெத்தர பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் இன்றைய தினம் 287 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை,29 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து குருணாகலை ,ஹிரிபிடிய, தித்தவெல்கால்ல பிரதேசத்திற்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam