கட்டுக்கடங்காத முல்லைத்தீவு நாயாற்று பருவகால தென்பகுதி மீன்பிடியாளர்களால் கோவிட் ஆபத்து!

Covid-19 Protest Fisherman Pcr test Mullaitivu district
By Varunan Jul 24, 2021 01:47 PM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்த அனுமதியும் இன்றி தெற்கின் புத்தளம் மாவட்டத்திலிருந்து முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் அத்துமீறி குடியமர்ந்து கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் மீன்பிடித் தொழிலாளர்களால் வடக்கில் பாரிய ஆபத்தினை தோற்றிவிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தளத்தினை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் வாடி அமைத்துக் குறுகிய நிலப்பரப்பில் தொழில் செய்து வருகின்றார்கள்.


யூலை மாத தொடக்கத்திலிருந்து இதுவரை அப்பகுதியில் 53 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முடக்கப்பட்டுள்ள தங்கள் பிரதேசத்தை விடுவிக்கக் கோரி (24.07.21 ) இன்று போராட்டத்தில் குதித்துள்ள மக்களால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய அச்சுறுத்தலாகக் காணப்படும் நாயாற்று மீனவ குடும்பங்களினால் சுகாதார பிரிவினருக்குச் சிரமங்களுக்கு முகம் கொடுத்து பணிசெய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்த பதிவும் இல்லாத மக்களால் சுகாதார பிரிவினருக்கு பணிசெய்வதில் பாரிய சவால்கள் இவர்கள் தொடர்பிலான கண்காணிப்போ அல்லது பதிவு நடவடிக்கையோ எவரிடமும் இல்லை இன்னிலையில் தான் (22.07.21)அன்று இந்த பகுதியிலிருந்து கோவிட் தொற்றாளர் ஒருவர் இரண்டு மாகாணங்களைக் கடந்து புத்தளத்திற்கு சென்றிருந்தமை இந்த மக்களின் அசண்டையீனத்தினை எடுத்துக்காட்டுகின்றது.

பொறுப்பற்ற மக்களாகப் பாமர மக்களாக எந்த அரச இயந்திரங்களுக்கும் கட்டுப்பாடாத மக்களாக இவர்கள் காணப்படுவதால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அல்லது இந்த நாட்டிற்கே ஒரு அச்சுறுத்தல் சமூகமாக மாறியுள்ளார்கள். ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வாழ்ந்து வரும் இந்த கரையோர மக்கள் ஒரு கோவிட் கொத்தணியினை தோற்றுவித்துள்ளார்கள்.

இது தொடர்பில் பொலிஸாரோ ஊடகத்தினரோ அரச நிர்வாகத்தினரோ அக்கறை இல்லாத நிலை சுகாதாரத் துறையினர் முழுமையான பங்களிப்புடன் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வரும் வேளையில் புத்தளம் மக்களின் ஒத்துழைப்பில்லாத நிலையில் அவர்கள் சுகாதார பிரிவினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பினையே வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி முடக்கப்பட்ட வேளை ஒரு சிவில் சமூகமாகக் காணப்பட்ட பகுதி அரச கட்டுப்பாட்டினை சட்டத்தினை நடைமுறைப்படுத்த அதனை ஏற்ற மக்களாகக் காணப்பட்டார்கள்.

அதற்கு முக்கியத்துவம் கொடுத்த ஊடகங்கள் அதிகாரிகள் ஏன் முல்லைத்தீவில் 53 தொற்றாளர்களை கொண்ட முடக்கப்பட்ட கரையோர பகுதி தொடர்பில் உண்மைத்தன்மையினை வெளிப்படுத்துவதிலும் அரச இயந்திரங்களுக்கு அழுத்தம் கொடுப்பதிலும் பின்னிற்கின்றன என்ற கேள்வி முல்லைத்தீவு மாவட்ட சமூக அக்கறையாளர்களிடம் எழுந்துள்ளது.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் காவலரண் அமைத்து வீதிசோதனை செய்து மக்களை விடாப்பிடியாக கட்டுப்படுத்திய பாதுகாப்பு தரப்பினர் புத்தளத்தினை சேர்ந்தவர்கள் வசிக்கும் நாயாற்று பகுதி தொடர்பில் அக்கறை காட்டவில்லை என்பது மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி அவ்வாறு அக்கறை காட்டியிருந்தால் எவ்வாறு ஒரு கோவிட் தொற்றாளர் மாவட்டம் விட்டு மாகாணம் விட்டு புத்தளத்திற்கு செல்லமுடியும்? இந்த நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏன் பாகுபாடு?

புத்தளத்தில் இருந்து பருவகால மீன்பிடிக்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாற்று பகுதிக்கு அனுமதி கொடுத்தது யார் இந்த ஆண்டு எவருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை எனகடற்தொழில் நீரியல்வளத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்னிலையில் ஆயிரம் வரையானவர்கள் சுமார் மூன்றூறு படகுகளுடன் இங்கு வந்து தொழில் செய்வதற்கு யார் அனுமதித்தார்கள் அவர்கள் தொடர்பிலான பதிவுகள் யாரிடம் உள்ளது?

இங்கு வாழ்கின்ற மக்கள் தொடர்பில் எந்த அரச அதிகாரிகளிடமும் பதிவு இல்லாத நிலையில் இவர்கள் செய்யும் தொழில்தான் என்ன கடற்தொழில் என்ற போர்வையில் இவர்கள் முல்லைத்தீவிற்கு வருவதன் நோக்கம் என்ன சட்டவிரோத தொழிலில் ஈடுபடவா (முல்லைத்தீவில் இருந்து இந்தியாவிற்கும் சர்வதேச கடல் எல்லையும் அருகில் இருப்பதன் காரணமா?) என்ற கேள்விகள் முல்லைத்தீவு மாவட்ட மக்களிடத்தில் எழுகின்றது.

இவ்வாறான தொழில் புரிபவர்களைக் கண்டுகொள்ளாத கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம் ஏன் கொரோனா காலகட்டத்தில் இவர்களை இங்கு தொழில் செய்ய அனுமதித்தது. நாயாற்று பகுதியில் புத்தளத்தினை சேர்ந்தவர்கள் வாழும் பகுதிக்கு அருகில்தான் நாயாறு கடற்படை தளம் அமைந்துள்ளது.

அண்மைய பகுதியில் இராணுவ முகாம்கள் காணப்பட்டாலும் அந்த மக்கள் சிங்கள மொழினை சரளமாகப் பேசக்கூடியவர்கள் என்பதன் காரணத்தினால் பாதுகாப்பு தரப்பினருடன் பேசியே தங்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள் அவர்களும் இசைவாகவே செயற்பட்டு வருவதனை இங்கு தமிழ்மக்கள் மத்தியில் அவர்கள் நடந்துகொள்ளும் செயற்பாட்டினை வைத்துக் காணக்கூடியதாக இருக்கின்றது.

இது ஒரு கோவிட் வலயத்தினை தொற்றிவிக்கும் செயற்பாடாகவே புத்தளம் மக்களின் நடவடிக்கை அமைந்துள்ளது. எத்தனை பேர் இவ்வாறு இங்கு வாழ்கின்றார்கள் என்று யாரிடமும் தெரியாத நிலை அரசாங்கத்தின் பண உதவியினை பெற்றுக்கொள்வதற்காக 198 பேர் பதிவு செய்துள்ளார்கள். நிவாரணம் கொடுக்கவுள்ளதாக பிரதேச செயலகத்தினால் பதிவினை முன்னெடுத்தபோது 845 போர் பதிவினை மேற்கொண்டுள்ளார்கள்.

அவ்வாறு பதிவினை மேற்கொண்டவர்கள் அனைவருக்கும் அன்டியன், பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என்று சுகாதார பிரிவினர் பரிந்துரை செய்த போது இல்லை 400 பேர் வரையில்தான் என்று புத்தளம் மீனவர்கள் சொல்கின்றார்கள்.

இவ்வாறு எந்த கணக்கும் பதிவும் அற்ற நிலையில் வாழ்ந்துவரும் புத்தள மீன்பிடியாளர்களால் அரச சுகாதார உத்தியோகத்தர்கள் தங்கள் கடமையினை முழுமையாகச் செய்யமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். முடக்கப்பட்ட பகுதியான இந்த பகுதியிலிருந்து 379 பேர்வரைக்கும் பி.சி.ஆர் செய்யப்பட்டதில் 24.07.21 வரை 53 கோவிட் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளார்கள்.

இன்னிலையில் முடக்கப்பட்ட ஒரு பகுதியில் உள்ள அனைவருக்கும் பி.சி.ஆர் செய்வத்காக 24.07.21 அன்று சுகாதார பிரிவினர் சென்றபோது முடக்கப்பட்ட பகுதியிலிருந்த புத்தளவாசிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

நாட்டில் எத்தனையோ மக்கள் தங்களுக்கு கோவிட் தடுப்பூசி வேண்டும் என வேண்டி நிற்கும் இந்த வேளையில் இந்த மக்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துளைக்காமையானது கவலையளிக்கின்றது.

கடற்தொழில் அமைச்சு,நீரியல்வளத்திணைக்களத்தின் எந்த அனுமதியும் இல்லாத நிலையில் இவாகளின் கடற்தொழில் நடவடிக்கையினையும் இவர்களின் தொழில் நடவடிக்கையினையும் யார் கண்காணிப்பார்கள் இவ்வாறானவர்களின் செயற்பாட்டினால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பாரிய ஆபத்து எதிர்காலத்தில் உள்ளது அரச பாதுகாப்பு இயந்திரங்கள் இதனைக் கருத்தில்கொண்டு சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை இங்கும் நிறைவேற்ற வேண்டும் என்பது முல்லைத்தீவு மக்களின் எதிர்பார்ப்பாகும்.  

GalleryGalleryGalleryGalleryGallery
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
நன்றி நவிலல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US