இந்தியாவை போன்று இலங்கையில் தீவிரமடையும் கோவிட்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிச்சை
இலங்கையில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் வரையிலான பீ.சி.ஆர் மற்றும் என்டிஜன் சோதனைகளை மேற்கொள்ளாது போனால் இந்தியாவை போன்று கோவிட் - 19 பாதிப்பு தீவிரமடையும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பு இந்தியாவில் தற்போது கோவிட் - 19 தொற்று தீவிரமடையும் நிலைக்கு ஒப்பானதாக அமையும் என்று பொது சுகாதார கண்காணிப்பாளர்கள் சம்மேளனம் எச்சரித்துள்ளது.
பொது சுகாதார பரிசோதகர் சம்மேளன செயலாளர் மஹேஸ் பாலசூரிய இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கடந்த வாரங்களில் சுகாதார வழிமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படவில்லை. மாவட்டங்களுக்கு இடையிலான எல்லைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.
எனவே எதிர்வரும் 14 நாட்களில் இதற்கான விளைவுகளை எதிர்நோக்கவேண்டியிருக்கும் என்று பாலசூரிய தெரிவித்துள்ளார். தற்போது சுமார் 500 அளவிலான கோவிட் - 19 தொற்றுக்கான என்டிஜன் மற்றும் பீ.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனினும் இது நாளொன்றுக்கு 10 ஆயிரமாக அதிகரிக்கப்படவேண்டும். அண்மைக்காலங்களில் குருநாகல், புததளம், கம்பஹா, கொழும்பு, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அதிகளவான கோவிட் - 19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பொதுமக்கள் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்று பாலசூரிய தெரிவித்துள்ளார்.
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri