கெஹலியவின் கோரிக்கை நீதிமன்றால் நிராகரிப்பு
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் நாடாளுமன்றக் கிளையில் உள்ள வங்கிக் கணக்கை முடக்கிய உத்தரவை நீக்குமாறு அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகேவினால் குறித்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகள் மற்றும் காப்பீட்டு ஒப்பந்தங்களை முடக்கி வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் சமீபத்தில் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இருப்பினும், ரம்புக்வெல்லவின் ஓய்வூதியம் மற்றும் அவரது வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதில் ஏற்பட்ட சேதத்திற்கு பெறப்பட்ட 9.59 பில்லியனுக்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகை வைப்புச் செய்யப்பட்டுள்ள நாடாளுமன்றக் கிளை வங்கிக் கணக்கும் நீதிமன்ற உத்தரவின் கீழ் முடக்கப்பட்டுள்ளன.
எனவே, குறித்த வங்கிக் கணக்கின் மீதான முடக்கத்தை நீக்க உத்தரவு பிறப்பிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் சமீபத்தில் கோரியிருந்தனர்.
மேற்படி கோரிக்கை தொடர்பான முடிவை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி, தொடர்புடைய கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

நாசா விண்வெளி வீரரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கவலை: புதிய புகைப்படத்தால் அதிர்ச்சி News Lankasri

மகாராஜாவை விட அதிக விலைக்கு விற்பனை ஆன விஜய் சேதுபதியின் புதிய படம்.. மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் Cineulagam

டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 ரீலோடட் போட்டியாளருக்கு விருந்து வைத்த சரத்குமார், சர்ப்ரைஸ் போன் கால்.. இந்த வாரம் நடக்கும் விஷயங்கள் Cineulagam

ரூ 24,000 கோடி மதிப்பிலான மாளிகையில் வசிக்கும் பெண்மணி: அவரது குடும்ப சொத்துக்களின் மதிப்பு News Lankasri
