மட்டக்களப்பு ரெலோ காரியாலயத்தில் கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தல் செய்ய நீதிமன்றம் தடையுத்தரவு
மட்டக்களப்பு தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ இயக்க காரியாலயத்தில் கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தலைச் செய்வதற்கு எதிராக இயக்கத்தின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினர் கோ. கருணாகரன் , முன்னாள் கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா ஆகியோருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 1983 ஜூலையில் வெலிக்கடை சிறைச்சாலையில் குட்டுமணி தங்கத்துரை உட்பட 38 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இவர்களின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு கோவிந்தன் வீதியிலுள்ள ரெலோ அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 25 ம் திகதி தொடக்கம் 27 ம் திகதி வரை இடம்பெறவிருந்தது.
இந்த நினைவேந்தலில் அரசியல்வாதிகள் தொடக்கம் ஆதரவாளர்கள் அதிகமானோர் கலந்து கொள்ளவுள்ளதால் நாட்டில் தற்போது கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டியதன் முகமாகச் சுகாதார நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டியதன் காரணமாக இந்த நினைவேந்தல் நடைபெறாமல் நிறுத்துவதற்கான நீதிமன்ற தடை உத்தரவொன்றை வழங்கியுள்ளனர்.
மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றில் கோரியதற்கமைய நீதிமன்றம் இருவருக்கும் நினைவேந்தல் செய்வதற்குத் தடை விதித்து உத்தரவு ஒன்றை நேற்று சனிக்கிழமை (24) பிறப்பித்து கட்டளை வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri