மன்னார் துப்பாக்கிச்சூடு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வழக்கு விசாரணைக்காக வருகை தந்த இருவர் உயிரிழந்ததுடன் ,பெண் ஒருவர் உள்ளடங்களாக மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
குறித்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் வியாழக்கிழமை(23) மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கடற்றொழிலாளர் கைது
மன்னாரைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கடற்றொழிலாளி கொலை சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்கள் அனைவரும் இராணுவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
