குருக்கள்மடம் புதைகுழி தொடர்பில் நீதிமன்று விடுத்துள்ள அறிவிப்பு
மட்டக்களப்பு - குருக்கள்மடம் புதைகுழி தொடர்பில் தொடர்புடைய அனைவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றிற்கு ஆஜராகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன் வழக்கானது எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு இன்று களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் எடுத்துகொள்ளப்பட்டது.
ஒத்திவைப்பு
இந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான எஸ்.எச்.எம்.மனாறுதீன், முபாறக் முஅஸ்ஸம் உட்பட சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.
குருக்கள்மடம் புதைகுழி தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நிதி தொடர்பில் தாமதங்களை உணர்ந்த நீதவான் இந்த வழக்குடன் தொடர்புடைய பங்காளர்கள் அனைவரும் எதிர்வரும் 17ஆம் திகதி 2.00மணியளவில் நீதிமன்றுக்கு வருகைதந்து கலந்துரையாடலை மேற்கொண்டு ஒரு தெளிவான தீர்மானத்தினை எடுப்பதற்காக நீதிவானால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வழக்கு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி எஸ்.எச்.எம்.மனாறுதீன் தெரிவித்தார்.
குறித்த வழக்கானது எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri