ராஜீவ் காந்தி கொலையின்போது சிதறிப்போன தொப்பி, பேட்ஜ்! - நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Courtesy: News 18

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு வெடித்து கொலை செய்யப்பட்டபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பிரதீப் பிலிப், படுகாயமடைந்து உயிர் தப்பியவர். பல்வேறு பொறுப்புகளை வகித்து, காவலர் பயிற்சியின் டிஜிபியாக பணியாற்றிய பிரதீப் பிலிப் இன்று ஓய்வு பெறுகிறார்.

அவருக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்டவர் பிரதிப் பிலிப் 1987 நேரடியாக இந்திய காவல் பணிக்கு தேர்வாகி, தமிழக காவல்துறையில் தன் பணியைத் தொடங்கினார்.

34 வருட தமிழக காவல்துறையில் பணியாற்றிய பிரதிப் பிலிப் போதை தடுப்புப் பிரிவு மற்றும் காவல் கண்காணிப்பாளராக ராமநாதபுரம் உட்பட நான்கு மாவட்டங்களில் பணியாற்றி உள்ளார். நெல்லை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் டிஐஜியாக பணியாற்றியுள்ளார்.

பின்னர் பதவி உயர்வு பெற்று காவலர் பயிற்சி மற்றும் பொருளாதார குற்றப்பிரிவில் ஐஜியாக பணியாற்றினார். பொருளாதார குற்றப்பிரிவு பிரிவு ஏடிஜிபியாக பணியாற்றினார். குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் குற்ற புலனாய்வு மற்றும் தமிழக காவல் பயிற்சியின் டிஜிபியாக பணியாற்றினார்.

காவல் துறையில் காவலர்கள் நண்பர்கள் குழுவை தமிழக காவல்துறைக்கு அறிமுகப்படுத்தியதில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு. காவலர் நண்பர் குறித்து புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். 2002ஆம் ஆண்டு லண்டனில் மிக உயரிய விருதான அரசியின் விருதை தமிழக காவலர் பயிற்சிகளை சிறப்பாக நிர்வகித்தற்கான விருதையும் இவர் பெற்றுள்ளார் .

இன்று ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் டிஜிபியாக பணி ஓய்வு பெற்ற பிரதீப் வீட்டிற்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. அவருக்கு காவல்துறையினரின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

அப்போது பேசிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, 34 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் பிரதீப் வி ஃபிலிப், தேசிய காவல் அகாடமி பல்கலைக்கழகங்களில் இரண்டு ஆண்டு பயிற்சி பெற்று தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் பணியில் சேர்ந்தோம்.

34 ஆண்டுகள் காவல் துறையில் தொடர்ந்து பயணித்து உள்ளோம். வித்தியாசமான போலீஸ் அதிகாரி ஆவார். கடுஞ்சொல் பயன்படுத்தாத காவல்துறை அதிகாரி என தெரிவித்துள்ளார். காவல்துறையினர் மக்களுக்கு நண்பராக இருக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர்.

ராமநாதபுரத்தில் மீனவர்களுக்கு கொண்டு ஒரு குழு அமைத்தார். பிற்காலத்தில் மீனவ கிராமங்களில் வில்லேஜ் விஜிலன்ஸ் கமிட்டி என அழைக்கப்பட்டது.

மீனவர்கள் கடலோர பாதுகாப்புப் படையின் காதுகளும் கண்களும் செயல்படும் வகையில் முக்கிய திட்டத்தை உருவாக்கி அடிப்படையாக செயல்பட்டவர் இவர்தான் என தெரிவித்துள்ளார்.

குற்றச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவும் வகையில் முக்கிய திட்டத்தை கொண்டு வந்தவரும் இவர்தான் என தெரிவித்துள்ளார். காவல்துறை பணியில் சேர்ந்தவுடன் பயிற்சியின்போது கடலுக்குள் மூழ்கி உயிர் பிழைத்து வந்த சாகச காவல்துறை அதிகாரி என தெரிவித்தார்.

இந்த சாகசம் என்பதை, அவர் கடைசியாகப் பணியாற்றிய வீடு வரைக்கும் தொடர்ந்து கொண்டு வந்துள்ளார். ஸ்குபா டைவிங் போன்ற சாகச பயிற்சியை காவல்துறைக்கு அறிமுகப்படுத்தியவர் என தெரிவித்தார்.

நமது காவலர்கள் சிறப்பாக அமைவதற்கு முக்கிய காரணம் பயிற்சி என்று கூறிய சைலேந்திர பாபு, பிரதீப் வி பிலிப் காவல் துறையில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்தாலும், காவல்துறை பயிற்சியில் சிறப்பாக பங்காற்றியதாக தெரிவித்துள்ளார்.

சிந்தனை பயிற்சி என்பதை காவல்துறையினருக்கு பயிற்சி அளித்ததில் முக்கியமாக பங்காற்றியிருக்கிறார். பிலிப்பிசம் என்ற சிறந்த நூலையும் எழுதியுள்ளார்.

ப்ரதீப் வி பிலிப் அனுபவம் கல்வி பயிற்சி தொடர்ந்து காவல் துறைக்கு அளிக்க வேண்டும் எனவும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கோரிக்கை விடுத்துள்ளார். அதன்பின் வாழ்த்துரை ஏற்று பேசிய ப்ரதீப் வி பிலிப், வாழ்க்கையில் ஒருநாள் பத்திரிகையாளர் ஆக வேண்டும் என விரும்பினேன்.

பணியின் கடைசி நாளான இன்று வாழ்க்கையின் இரண்டாவது அத்தியாயத்தின் முதல் நாள் என தெரிவித்தார். உலகத்தில் பல்வேறு காவல் துறையினர் இருந்தாலும், சிறப்பான காவல்துறை தமிழ்நாடு காவல்துறை என தெரிவித்த அவர்,

அதில் நீண்ட ஆண்டு காலம் பணிபுரிந்து பெருமை கொள்கிறேன் என தெரிவித்தார். 34 ஆண்டுகளாக காவல்துறையில் பணி புரிந்துள்ளேன். என் பணிக் காலத்தின் தொடக்கத்தில் எஸ்பியாக இருந்தபோது இரண்டு மோசமான சம்பவங்களை வாழ்க்கையில் சந்தித்தேன்.

காஞ்சிபுரம் எஸ்.பி. ஆக இருந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு பாதுகாப்பு பணியில் இருந்தபோது, அவருக்கென விரிக்கப்பட்ட சிகப்பு கம்பள விரிப்பு அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தேன்.

நான் பள்ளியில் படிக்கும்போது காவல்துறையில் பணிபுரிவேன் எனக் கூறினார்கள் அதை நான் நம்பவில்லை. தனக்கு துப்பறியும் சக்தி அதிகமாக இருப்பதால் காவல்துறையில் பணியாற்றுவாய் என தெரிவித்தனர்.

என்னுடைய துப்பறியும் சக்தியையும் தாண்டி நிகழ்ந்த சம்பவம் தான் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட மனித வெடிகுண்டு சம்பவம். அப்போது நான் காற்றில் வீசப்பட்டேன்.

இந்தியாவின் ஜான் எஃப் கென்னடி ஆன ராஜீவ்காந்தி வெடிகுண்டு விபத்தில் வீசி கிடந்தபோது கெட்ட கனவு என நினைத்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் முகம் முழுவதும் ரத்தமாக இருப்பதைக் கண்டு ஏதோ நிகழ்ந்துள்ளது உணர்ந்ததாக கூறிய அவர், என் முகம் உடல் முழுவதும் ரத்தம் இல்லமாக இருந்தது என்றும், அந்த வெடிகுண்டு விபத்தில் சிக்கிய பிறகு ரத்தவெள்ளத்தில் இருந்த நான் பயங்கர தாகத்தில் இருந்தேன்.

அந்த நேரத்தில் ஒரு சாதாரண குடிமகன் எனக்கு தண்ணீர் கொடுத்தார். இன்று கூட அவரது முகம் எனது நினைவில் உள்ளது அவர் கடவுள் அனுப்பிய தேவதை என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார். அவர் பெயர் புருஷோத்தமன் என்று தெரிவித்தார்.

அந்தச் சம்பவம் தான் எனது நம்பிக்கையின் வேராக இருந்தது. பாறை போன்று அந்த நம்பிக்கை ராக்கெட்டை போன்று அடுத்தடுத்து மேலே செல்வதற்கு உந்துதலாக இருந்ததாக தெரிவித்தார்.

ஒவ்வொரு காவல் துறையினரும் ராக்கெட் போன்று அடுத்தடுத்த படி நிலைக்குச் செல்ல வேண்டும் என்று கூறிய அவர், சமுதாயத்திற்கு பெரிய அளவில் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றும் ப்ரதீப் வி பிலிப் கூறினார்.

உடலை உறுதியாக வைத்துக் கொள்ளும் விவகாரத்தில் நமது தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஒரு சூப்பர் மனிதன் என ப்ரதீப் வி பிலிப் பாராட்டினார்.

ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் 100 கிலோமீட்டர் சைக்கிள் பயிற்சி மேற்கொள்வது ஆகியவற்றை குறிப்பிட்ட அவர், தமிழ்நாடு காவல் துறையின் தலைவராகப் பதவியேற்ற பிறகு தனது உடல் உறுதியை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு பாராட்டு தெரிவித்தார்.

மனிதநேயமிக்க சைலேந்திரபாபு காவல் துறையின் தலைவராக இருப்பது பெருமை கொள்வதாக கூறிய ப்ரதீப் வி பிலிப், நான் காவல்துறையில் பணியாற்றிய விதத்தை நீங்கள் தெரிவித்தீர்கள், நீங்கள் எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் ஆற்றிய பணி சிறந்தது என்றார்.

தமிழக காவல்துறைக்கு எதிர்காலத்தில் சிறந்த நாட்கள் உள்ளன. நான் லண்டன் கொண்டிருக்கும் பொழுது, அங்கிருக்கும் பிரதமர் வருவதையொட்டி பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் என்னை தடுத்து நிறுத்தினர். என்னுடைய அடையாள அட்டையை காண்பிக்குமாறு தெரிவித்தனர்.

இரவில் காவல் துறை அடையாள அட்டையை காண்பிக்க பிறகு என்னையும் எனது மனைவியையும் அங்கு இருந்த லண்டன் காவல்துறையினர் மரியாதையோடு நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் தியாகம் செய்து வேலை பார்ப்பவர்கள் காவல்துறையினர் என பெருமிதமாக தெரிவித்தார் ப்ரதீப் வி பிலிப், தமிழக அரசும் காவல்துறைக்கு சிறந்த வகையில் ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நான் துவக்கிய பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்றுவார்கள் என்றும், கடந்த 18 மாதங்களில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு அளிப்பதில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பங்கு முக்கியமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனக்கு கொடுத்த கடைசி அணிவகுப்பு என் ஞாபகத்தில் என்றும் இருக்கும் என தெரிவித்தார் ப்ரதீப் வி பிலிப், பெண் காவலர்கள் காவல் துறையின் பெருமைக்குரியவர்கள் என பாராட்டு தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில், மனித வெடிகுண்டு வெடித்தபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, அப்போதய காஞ்சிபுரம் ஏ.எஸ்.பி. ஆக இருந்த பிரதீப் பி பிலிப் படுகாயமடைந்து உயிர் தப்பினார்.

அப்போது அவர் பயன்படுத்திய தொப்பி மற்றும் பேட்ச் உள்ளிட்டவை ஆவணப் பொருட்களாக வழக்கில் வைக்கப்பட்டிருந்தது.

இன்று டிஜிபியாக பிரதீப் வி பிலிப் ஓய்வுபெற இருந்ததால் தொப்பி மற்றும் பேட்ச் ஆகியவை பயன்படுத்த, முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் தொப்பி மற்றும் பேட்ச் ஓய்வு பெறும் வேலையில் பயன்படுத்துவதற்காக அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஓய்வு பெறும் போது தொப்பி மற்றும் பேட்ச் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு இடைக்கால அனுமதி அளித்து ஒப்படைத்தது. ஓய்வு பெற்ற பின் மீண்டும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அந்த அடிப்படையில் இன்று தொப்பி மற்றும் பேட்ஜை நீதிமன்ற அனுமதியோடு டிஜிபி ப்ரதீப் வி பிலிப் அணிந்து கொண்டிருந்தார். இதற்காக 1 லட்ச ரூபாய் நிபந்தனை தொகை செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்

மரண அறிவித்தல்

திருமதி செல்லம்மா பொன்னம்பலம்

குரும்பசிட்டி, Markham, Canada

02 Dec, 2021

மரண அறிவித்தல்

திருமதி தவமணி கபிரியேல்பிள்ளை

சங்குவேலி, சில்லாலை, Toronto, Canada

02 Dec, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திரு கைலாசபிள்ளை மகேசலிங்கம்

சிறுப்பிட்டி தெற்கு, யாழ் புத்தூர் வடக்கு, Jaffna

03 Dec, 2021

மரண அறிவித்தல்

திருமதி இரத்தினசிகாமணி சரஸ்வதி

தெல்லிப்பழை, திருகோணமலை, பரிஸ், France

27 Nov, 2021

மரண அறிவித்தல்

திருமதி மீனாட்சி கனகலிங்கம்

உரும்பிராய் கிழக்கு, சிட்னி, Australia

25 Nov, 2021

மரண அறிவித்தல்

செல்வி சிவதேவி வேலும்மயிலும்

உடுப்பிட்டி, பம்பலப்பிட்டி

28 Nov, 2021

நன்றி நவிலல்

திருமதி பாலமணி பொன்னம்பலம்

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

07 Nov, 2021

மரண அறிவித்தல்

திரு சிறில் வீரசிங்கம்

வடலியடைப்பு, Toronto, Canada, வவுனியா

05 Dec, 2021

மரண அறிவித்தல்

நன்றி நவிலல்

மரண அறிவித்தல்

திரு செல்வராசா யதகுலராசா

யாழ்ப்பாணம், வவுனியா

04 Dec, 2021

மரண அறிவித்தல்

திரு குயின்ரஸ் புவனேந்திரன் கொலின்ஸ்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

05 Dec, 2021

மரண அறிவித்தல்

திரு மாணிக்கம் பாலசிங்கம்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வெள்ளவத்தை

04 Dec, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கைலாயநாதன் ஆறுமுகம்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

06 Dec, 2020

மரண அறிவித்தல்

திருமதி நித்தியலெட்சுமி சோமசுந்தரம்

வண்ணார்பண்ணை, ஓட்டுமடம், La Courneuve, France

26 Nov, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அப்புத்துரை ஜெயரத்தினம்

இணுவில், கொக்குவில்

07 Dec, 2020

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வசந்தாதேவி புவனேந்திரன்

கோப்பாய் வடக்கு, ப்றீமென், Germany

15 Dec, 2020

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திரு செல்லையா கணேசலிங்கம்

உரும்பிராய், சென்னை, India

04 Dec, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திரு பொன்னையா சார்ள்ஸ் சந்திரசேகரா

யாழ்ப்பாணம், வவுனியா, Sierra Leone, London, United Kingdom, England, United Kingdom

27 Nov, 2021

3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அன்ரன் ஜேசுராசா

துன்னாலை, கிளிநொச்சி, நெதர்லாந்து, Netherlands, London End, United Kingdom

04 Dec, 2018

36ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் E K சண்முகநாதன்

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985

10ம் ஆண்டு நினைவஞ்சலி

10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நடராஜா ஞானலிங்கம்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், ஆனைப்பந்தி

04 Dec, 2011

மரண அறிவித்தல்

திரு வேலுப்பிள்ளை இராசையா

அனலைதீவு 1ம் வட்டாரம், பாண்டியன்குளம்

03 Dec, 2021

மரண அறிவித்தல்

திரு சில்வெஸ்டர் சவிரிமுத்து

யாழ்ப்பாணம், Massy, France

28 Nov, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

செவ்வி ஜனார்த்தனி இராஜேந்திரா

வட்டுக்கோட்டை, Scarborough, Canada

28 Nov, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பொன்னையா நவரட்ணம்

அராலி, திருகோணமலை, ஜேர்மனி, Germany

03 Dec, 2018

மரண அறிவித்தல்

திரு பூபாலசிங்கம் குமாரசாமி

ஏழாலை, வளலாய், Pickering, Canada

02 Dec, 2021

மரண அறிவித்தல்

திரு ஜோர்ஜ் மனுவேற்பிள்ளை

நாரந்தனை, Narantanai, Scarborough, Canada

01 Dec, 2021

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அமரர் பறுவதம் சுப்பிரமணியம்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, சாம்பியன் லேன் கொக்குவில்

03 Nov, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வில்வரெட்ணம் வைத்திலிங்கம்

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020

மரண அறிவித்தல்

திருமதி தருமலிங்கம் சரஸ்வதி

நயினாதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

27 Nov, 2021

மரண அறிவித்தல்

திரு சுப்பையா கிருஷ்ணபிள்ளை

புங்குடுதீவு 4ம் வட்டாரம், செட்டிக்குளம், Liestal, Switzerland

30 Nov, 2021

மரண அறிவித்தல்

திரு றெஜினோல்ட் ஜீவரட்ணம் சண்முகராஜா

கொட்டாஞ்சேனை, London, United Kingdom

26 Nov, 2021

மரண அறிவித்தல்

திரு கமலராஜன் மனோரஞ்சன்

உரும்பிராய், கொழும்பு, Redbridge, United Kingdom

28 Nov, 2021

மரண அறிவித்தல்

திரு சுப்பிரமணியம் வரதலிங்கம்

மயிலிட்டி, London, United Kingdom

25 Nov, 2021

மரண அறிவித்தல்

திரு குமாரசாமி குணாளன்

வேலணை 2ம் வட்டாரம், Chelles, France, Kenton, United Kingdom

24 Nov, 2021

மரண அறிவித்தல்

திரு மாப்பாணர் துரைராஜா

மாவிட்டபுரம், London, United Kingdom

27 Nov, 2021

மரண அறிவித்தல்

திரு தம்பித்துரை சஞ்சீவ்ராஜ்

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US