புதுக்குடியிருப்பில் வெடிபொருட்களை வைத்திருந்த தம்பதியினர் கைது(Photos)
புதுக்குடியிருப்பு - இரணைப்பாலை பகுதியில் வீட்டில் வெடிபொருள் வைத்திருந்த கணவனும் மனைவியும் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவபுலனாய்வு பிரிவிற்குக் கிடைத்த தகவலுக்கு அமையக் குறித்த வீட்டிற்குச் சென்றபோது வீட்டில் வெடிபொருட்கள் காணப்பட்டுள்ள நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போரின்போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் வெட்டி எடுக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன் அவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட குடும்பப் பெண் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டவேளை அவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்ட குடும்பத் தலைவனைப் புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலையத்தில்
72 மணித்தியாலங்கள் தடுத்துவைத்து விசாரணைக்குட்படுத்த நீதிமன்றின் அனுமதியைப்
பொலிஸார் பெற்றுள்ளனர்.


டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri