நாடு பாரதூரமான அனர்த்தத்தின் விளிம்பில்
நாடு பாரதூரமான அனர்த்தம் ஒன்றின் விளிம்பில் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
இதனால், ராஜபக்சவாதம் கூறும் உபதேசங்களை தொடர்ந்தும் கேட்காது மக்கள் உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். மக்கள் எழுச்சிப் பெறும் காலம் வந்துள்ளது. அந்த மக்கள் எழுச்சியானது அமைதியான முறையிலும் அகிம்சை வழியிலும் இருக்க வேண்டும்.
இவ்விதமாக இலங்கை அரசால் தொடர்ந்தும் முன்நோக்கி செல்ல முடியாது.
பொது மக்கள் இந்த பிரச்சினையில் தலையிடுவதை தொடர்ந்தும் தாமதம் செய்தால், அந்த பிரச்சினை மேலும் உக்கிரமடைய காரணமாக அமையும் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri