ரஷ்யாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்க சொல்லும் நாடுகள்
ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு பிரான்ஸ் உத்தரவிட்டுள்ளது.
தற்போது உக்ரைனில் நடைபெற்று வரும் தாக்குதலை தொடர்ந்து பிரான்ஸ் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மிகவும் அத்தியாவசிய தேவைகளின்றி பிரான்ஸ் குடிமக்கள் யாரும் ரஷ்யாவில் தங்க வேண்டாம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேபோல வேறு நாடுகளும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவின் வெளியுறவுத் துறை அலுவலகம், “ரஷ்யா முழுவதும் எந்த இடத்திற்கும் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளது. நாட்டைவிட்டு வெளியேறுவது கடினமாகும் மற்றும் "பொருளாதார சரிவு" எனக்கூறி இந்த அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் இதேபோன்றுதொரு அறிவிறுத்தலை வெளியிட்டுள்ளது. பல காரணங்களை சுட்டிக் காட்டியுள்ள அமெரிக்கா, ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகளால் அமெரிக்க குடிமக்கள் தாக்கப்படலாம் என்ற காரணத்தையும் சேர்த்துள்ளது.