வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம்! - நிதி அமைச்சு
2021, ஆகஸ்ட் 11 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம் பல உணவுப் பொருட்களுக்கு புதிய வரி விதிக்கப்படவில்லை என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நிதி அமைச்சகம் இது தொடர்பில் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவிப்பில், உலர்ந்த கருவாடு, நெத்தலி மற்றும் உப்பு உள்ளிட்ட பல உணவுப் பொருட்களுக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த வரி விதிப்பின் செல்லுபடியாகும் காலம் மட்டுமே நீடிக்கப்பட்டுள்ளது.
2021, பெப்ரவரி 11ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில், இறக்குமதி செய்யப்பட்ட நெத்தலி, மற்றும் கருவாடு மீதான சிறப்புப் பொருட்களின் வரி விதிப்பு காலத்தை 06 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டிருந்தது.
அதன்படி 2021, ஆகஸ்ட் 11 ஆம் திகதியுடன், அந்த வர்த்தமானியில் செல்லுபடியாகும் காலம் காலாவதியானது என்று நிதி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
