பிரித்தானியாவில் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு கோவிட் பரவல் உயர்வு!
பிரித்தானியாவில் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு கோவிட் தொற்றின் பரவல் வேகமெடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, பிரித்தானியாவில் கோவிட் பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 9,055 பேர் பாதிக்கப்பட்டதோடு 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பெப்ரவரி 25ம் திகதிக்கு பின்னர் ஒரே நாளில் பதிவான அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும் என பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 4,589,814 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 127,926 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 167,382 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 206 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 4,294,506 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan