மட்டக்களப்பில் அதிகரிக்கும் கோவிட் தொற்றாளர்கள்
மட்டக்களப்பு நகரில் இன்றைய தினம் எட்டு கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
இன்று காலை மட்டக்களப்பு நகரில் பொலிஸார் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இணைந்து விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இன்று காலை மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சுதத் மாரசிங்க தலைமையில் மட்டக்களப்பு நகர பகுதியில் இடம்பெற்ற விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது மட்டகளப்பு நகர்ப்பகுதியில் முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதோர் பலர் கைது செய்யப்பட்டு அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மட்டக்களப்பு நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள், வீதிகளில் முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் பலர் கைது செய்யப்பட்டு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்து.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவர் கோவிட் தொற்றாளர்களாக
இனங்காணப்பட்ட நிலையில் அவர்களின் குடும்பத்தினர் அன்டிஜன்
பரிசோதனைக்குட்படுத்தப்பட்டபோது மேலும் ஆறு பேர் தொற்றாளர்களாக
இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan