கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தின் இந்த ஆண்டுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது..
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (27) நடைபெற்றுள்ளது.
அபிவிருத்தி திட்டங்கள்
இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மாவட்டத்தின் முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
இக்கலந்துரையாடலில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
சிவஞானம் சிறீதரன், கஜேந்திரன், அங்கஜன் இராமநாதன் மற்றும் வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ். இளங்கோவன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்கள், வடக்கு மாகாண அமைச்சுக்களின்
செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், கிளிநொச்சி மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், இராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், பிரதேச சபைகளின் செயலாளர்கள்,
மாவட்ட திணைக்களங்கள் சார் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கிராம மட்ட
அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்.