நிலக்கரி தட்டுபாடு: அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சம்
லக்விஜய அனல்மின் நிலையத்திற்கான நிலக்கரியை வாங்குவதற்கான கேள்வி பத்திரத்தை சுற்றியுள்ள சர்ச்சையானது, மீண்டும் வீதிப்போராட்டங்களை மேற்கொள்ள எதிர்கட்சிகளுக்கு வாய்ப்பளிக்கும் என்ற தெளிவான அச்சமும் அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ளது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் கோரிக்கையின் பேரில், ஐக்கிய அரபு ராச்சியத்தை தளமாகக் கொண்ட நிறுவனத்துக்கு ஆகஸ்ட் 25 அன்று வழங்கப்பட்ட நிலக்கரி கேள்வி பத்திரத்தை இந்த வாரம் அமைச்சரவை ரத்து செய்தது.
கேள்வி பத்திரம் ரத்து

கேள்வி பத்திரத்துக்கான விநியோகஸ்தரின் கொடுப்பனவு உத்தரவாதம் உட்பட்ட பிரச்சினைகளே இந்த ரத்துக்கான காரணங்களாகும்.
இருப்பினும், கேள்வி பத்திரத்தை ரத்து செய்வது, மின்வெட்டு காலத்தை கணிசமாக அதிகரிக்கக்கூடும்.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட மின்வெட்டு காலத்தை ஒரு மணித்தியாலத்திலிருந்து 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக அதிகரிக்க இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

இந்தநிலையில் தற்போதுள்ள நிலக்கரி கையிருப்பு அக்டோபர் 28 வரை மட்டுமே போதுமானது. அதற்குள் புதிய இருப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றால், இந்த மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று அலகுகளையும் மூட வேண்டியிருக்கும்.
அதாவது 820 மெகாவோட்களை தேசிய மின்கட்டமைப்பில் இருந்து இழக்க நேரிடும். இதன் காரணமாக 8 முதல் 10 மணி நேரம் வரை மின்வெட்டை நீடிக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் வரும் வப் பௌர்ணமி போயா தினத்தில் மேலும் பரவலான எதிர்ப்புக்கள்
எதிர்பார்க்கப்படுகின்றன.
மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி விக்ரமசிங்கவுக்கு கடிதம் மூலம் தீர்வைக்
கோரும் அளவுக்கு இந்த பிரச்சினை தீவிரமடைந்துள்ளது.
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan