சுன்னாகம் தாக்குதல் விவகாரத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்: ஜோஸப் ஸ்டாலின் வலியுறுத்து
சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு பதில் பொலிஸ் மா அதிபர் வருகை தந்து சென்ற சில மணிநேரத்தில் இடம்பெற்ற அராஜகத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
பதில் பொலிஸ் மா அதிபர்
“தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸாரின் செயல்பாடுகளை காணொளி பதிவு செய்து சமூக ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்தினால் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இது இவ்வாறு இருக்கையில் நேற்றையதினம் பதில் பொலிஸ் மா அதிபர் சுன்னாகத்திற்கு வருகை தந்து புதிய பொலிஸ் நிலையத்தினை திறந்து வைத்துவிட்டு சென்று சில மணி நேரத்தில், அவரது சுற்றறிக்கையை மீறி அராஜகம் இடம்பெற்றுள்ளது.
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் பெயர் எழுதப்பட்ட முச்சக்கர வண்டியில் வந்த பொலிஸாரினால் தாக்குதல் நடாத்தப்பட்டவேளை, அந்த தாக்குதலை காணொளி பதிவு செய்த ஆசிரியரின் கைப்பேசியை பொலிஸார் பறித்து சென்றனர்.
பொலிஸாரின் அராஜகம்
பதில் பொலிஸ் மா அதிபரின் சுற்றறிக்கையின் பிரகாரம் அவர் இவ்வாறு காணொளி பதிவு செய்துள்ளார்.

இது இவ்வாறு இருக்கையிலேயே பொலிஸாரின் அராஜகம் இடம்பெற்றுள்ளது. இதுவரை அந்த கைப்பேசி கொடுக்கப்படவுமில்லை” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri