தலிபான்களின் மற்றுமொரு கோர முகம் அம்பலம் - செய்திகளின் தொகுப்பு
ஆப்கானிஸ்தான் இளைஞர்கள் இசையால் மோகத்தில் வழி தவறி செல்வதாக தெரிவித்துள்ள தலிபான்கள், அந்த இசைக்கு பயன்படுத்தப்படும் கருவிகளை எரித்து அழித்துள்ளனர்.
ஆப்கானில் ஆட்சிப் பொறுப்பைபேற்ற நாள் முதல் தலிபான்கள் அங்குள்ள மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் விதிக்கும் தலிபான்கள், கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு கடும் தண்டனையையும் அளித்து வருகின்றனர்.
குறிப்பாக பெண்கள் உயர்கல்வி கற்கக்கூடாது, அவர்கள் தனியே எங்கும் செல்லக்கூடாது, ஆண்கள் நீண்ட தாடி வளர்க்கவேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள்.
இந்த நிலையில், தற்போது மற்றுமொரு கட்டுப்பாட்டையும் விதித்து தமது கொடூர முகத்தை காண்பித்துள்ளனர். அதாவது ஆப்கானில் இசையால் இளைஞர்கள் வழி தவறி செல்வதாக தெரிவித்துள்ள அவர்கள் அந்த இசைக்கு பயன்படுத்தப்படும் கருவிகளை எரித்து அழித்துள்ளனர்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |