கொவிட் வைரஸ் தொடர்பில் விசேட வர்த்தமானி - மீறிச் செயற்படுவோருக்கு தண்டனை
தனியார் வைத்தியசாலைகளில் கொவிட் பரிசோதனை செய்யும் போது அறவிடப்படும் கட்டணம் தொடர்பான நிர்ணய விலையை அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தனியார் வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய பரிசோதனை நிலையங்களில் PCR மற்றும் Antigen பரிசோதனைகளை நடத்துவதற்கான நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தனியார் துறையினரிடம் நடத்தப்படும் PCR பரிசோதனைகளுக்காக 6,500 ரூபாவும், Antigen பரிசோதனைக்காக 2000 ரூபாவும் ஆகக்கூடிய கட்டணமாக அறவிடப்படும் என அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலை மீறி செயற்படும் தனியார் வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய பரிசோதனை நிலையங்கள் தொடர்பிலான முறைபாடுகளை 1977 என்ற இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.