இலங்கையை பின் தொடரும் அமெரிக்க - பிரித்தானிய புலனாய்வு கட்டமைப்புக்கள் - MI5 - CIA (Video)
இலங்கை மற்றும் இந்திய, சீனா உறவு தொடர்பில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் புலனாய்வு கட்டமைப்புக்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக பிரித்தானியாவில் உள்ள இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவிலிருக்கும் இலங்கை தூதரகத்தில் இராஜதந்திரிகள் உரையாடும் அறையில் இரகசிய கமராக்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவிலிருக்கும் இலங்கை தூதரகத்தில் இராஜதந்திரிகள் உரையாடும் அறையில் MI5 - CIA இரகசிய கமராக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இவை பிரித்தானியாவின் நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இருப்பினும் இதனை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் இலங்கை அரசாங்கத்திடம் இல்லாத காரணத்தினால் இலங்கையின் அரசியல் நடவடிக்கை தற்போது கேள்விக்குறியாகவே உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,