நடுவீதியில் திடீரென நிறுத்தப்பட்ட லொறி.. பேலியகொடவில் கடும் போக்குவரத்து நெரிசல்
பேலியகொடவில் கொள்கலன் லொறி ஒன்றின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நடுவீதியில் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அப்பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் இன்று (ஜூலை 01) காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பேலியகொடவில் உள்ள களனிப் பாலத்திற்கு அருகே குறித்த கொள்கலன் லொறியின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு, நடுவீதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, கொழும்பு செல்லும் பல வீதிகளில் இன்று காலை தொடக்கம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இயந்திர கோளாறு
களனிப் பாலத்திற்கு அருகிலுள்ள பேலியகொட பகுதியில் கொள்கலன் லொறி பயணித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அதன் இயந்திரம் பழுதடைந்துள்ளதாக பொலிசாரின் விசாரணைளில் தெரிய வந்துள்ளது.

இந்தச் சம்பவத்தால் போக்குவரத்து தடைபட்டுள்ளதாகவும், நடு வீதியில் நிறுத்தப்பட்டுள்ள கொள்கலன் லொறி வாகனத்தை அகற்றும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், அது ஒரு கனரக கொள்கலன் லொறி என்பதுடன், அதன் கொள்கலன்கள் நீளமானவை என்பதாலும் அதனை அகற்றும் பணிக்கு கணிசமான நேரம் எடுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 23 மணி நேரம் முன்
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam