யாழில் மின்சார பாவனையாளர்களுக்கு மின்சார சபையின் அறிவுறுத்தல்
யாழில் மின்சார கட்டணம் நிலுவையிலுள்ள பாவனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் யாழ். தலைமை பிரதம பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (27.01.2023) இந்த நடவடிக்கை குறித்து தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் வாரங்களில் நடைமுறைப்படுத்தப்படும் எனறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், யாழ். மாவட்ட மின்சார பாவனையாளர்களில் ஒரு மாதத்துக்கு மேல் மின்சார கட்டணம் நிலுவையாக உள்ளவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.

சட்ட நடவடிக்கை
இவ்வாறான சந்தர்ப்பத்தில் 3 ஆயிரத்து 250 ரூபா மீள் இணைப்பு கட்டணம் அறவிடப்படுவதோடு, 6 மாத காலத்துக்கு மேலாக மின்துண்டிப்பு செய்யப்பட்டுவதுடன், நிலுவை செலுத்தப்படாத பாவனையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மின்சார கட்டணம் செலுத்தாது நிலுவை உள்ள பாவணையாளர்கள் உடனடியாக
மின்சார கட்டண நிலுவையை செலுத்தி மின்சார துண்டிப்பை தவிர்க்குமாறு
பொறியியலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan