சீமெந்து பற்றாக்குறையால் கட்டுமான பணிகளும் தடைபடுகிறது
சந்தையில் கடுமையான சீமெந்து தட்டுப்பாடு காரணமாக சுமார் 50 சதவீத கட்டுமான பணிகள் முற்றிலுமாக நின்றுவிட்டதாக கட்டுமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலைமையால், பல கட்டுமானப் பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் சம்பளம் கூட கொடுக்க முடியாமல் வீட்டுக்கு அனுப்பப்பட்டதாக நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீமெந்து மூட்டையின் சராசரி விலை ரூ.1375 ஆனால் இன்றைய காலத்தில் ரூ.1500, ரூ.1600 என அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், அந்த விலையில் கூட சீமெந்து வாங்க முடியாத நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பெரும்பாலான கட்டுமானத் தளங்கள் கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைந்துள்ளன. இந் நிலையில், சீமெந்து தட்டுப்பாடு காரணமாக இவற்றில் பல கட்டிட தளங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.





ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

பிணைக் கைதிகள் உடல்களை ஒப்படைப்பதில் சிக்கல்: ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு News Lankasri
