அடுத்த 24 மணி நேரத்திற்குள் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்! களனி கங்கையை அண்மித்த மக்களுக்கு எச்சரிக்கை

Sri Lankan Peoples Weather
By Dhayani Aug 03, 2026 09:48 AM GMT
Report

புதிய இணைப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்குள் களனி ஆற்றுப்பகுதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத்திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

களனி ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் கனமழை பெய்துள்ளதாக அத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மழை தொடர்வதால், தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் யட்டியந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட களனி ஆற்றுப்பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக, களனி ஆற்றில் நீர்மட்டம் உடனடியாக உயரக்கூடும். எனவே, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும், அப்பகுதிகள் வழியாகப் பயணிக்கும் வாகன சாரதிகளும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இரண்டாம் இணைப்பு

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, களனி ஆற்றுப் படுகைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நிலை 01 விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு அடுத்த 48 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த அறிவிப்பு 5 ஆம் திகதி காலை 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இந்த நிலைமை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், அப்பகுதிகள் வழியாகச்செல்லும், வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

முதலாம் இணைப்பு

கடந்த 24 மணி நேரத்தில் மகாவலி, களனி மற்றும் களு ஆறுகளின் மேல் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை பெய்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளராக பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

அதிகாலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 20 பேர் காயம்

அதிகாலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 20 பேர் காயம்

அதிகமான மழையும் பதிவு

அதன்படி, மகாவலி ஆற்றின் மேல் பகுதிகளில் அமைந்துள்ள நாவலப்பிட்டிய, நானுஓயா மற்றும் வத்தளை போன்ற பகுதிகளில் சுமார் 200 மி.மீ மழையும், சில இடங்களில் 200 மி.மீ-க்கு அதிகமான மழையும் பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்! களனி கங்கையை அண்மித்த மக்களுக்கு எச்சரிக்கை | Considerable Rainfall Mahaweli Kelani Kalu Ganga

இதன் காரணமாக, நாவலப்பிட்டிய மற்றும் பேராதெனியாவிற்கு இடையே மகாவலி ஆற்றின் அருகே வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

 தற்போது நீர்மட்டம் வேகமாக உயராவிட்டாலும், இயல்பான உயர்வையே கண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வெள்ள நிலைமை பேரிடர் நிலை வரை மோசமடையாது என்று எதிர்பார்ப்பதாகவும், நேற்று இரவு சில இடங்களில் 70 மி.மீ-க்கு மேல் மழை பெய்ததால் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததில் இந்த நிலைமை காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது நீர்மட்டம் குறைந்து வந்தாலும், சில தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கலா ஓயா மற்றும் அத்தனகலு ஓயா  பகுதிகளில் அதிக மழை பெய்யாததால், அப்பகுதிகளில் வெள்ள அபாயம் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாளையும் பாடசாலைகளுக்கு விடுமுறை! வெளியானது முக்கிய அறிவிப்பு..

நாளையும் பாடசாலைகளுக்கு விடுமுறை! வெளியானது முக்கிய அறிவிப்பு..

 

you may like this video

 

மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US