விஜயதசமியை முன்னிட்டு பிரதமரின் வாழ்த்து செய்தி

Srilanka Covid-19 People Mahinda Rajapaksa
By Independent Writer Oct 14, 2021 07:00 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

என் அன்பிற்குரிய இலங்கை வாழ் இந்து மக்கள் அனைவருக்கும் உன்னதமான இந்த விஜயதசமி நன்னாளிலே நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதிலே மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன் என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksha) தெரிவித்துள்ளார்.

விஜயதசமியை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

அதில் மேலும், 

இலங்கை மாதாவின் பிள்ளைகளாகிய நாம் அனைவரும், சமய சக வாழ்வு என்னும் நீரோட்டத்துடன் கலந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

இவ்வேளையில், உலகமெங்கும் தீராத இடராக நிலவிக் கொண்டிருக்கும் கோவிட் – 19 தொற்று மக்களிடையே ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது.

இந்த இடர், ஆன்மிக பலத்தினாலும் சரியான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதாலும் வெல்லப்படக்கூடிய ஒன்று.

வழமையாக நவராத்திரி நோன்புக் காலம் இந்துக்கள் வாழ்கின்ற இடமெல்லாம் கோலாகலமாகக் கொண்டாடி மகிழும் ஒரு நோன்புக் காலமாகும்.

அந்த நிலையை மீளவும் நாம் பெற வேண்டும். அதற்கு இறை சக்தியே துணை என்ற நம்பிக்கையுடன் நம் பிரார்த்தனை அமைய வேண்டும்.

அன்னை அம்பிகையின் அருள் வேண்டிய இந்நோன்பின் நிறைவு நாளாகிய விஜயதசமியையும் பக்தியோடும் சுகாதார நடைமுறைகளோடு கூடியதாயும் அனுஷ்டியுங்கள்.

என் அன்பிற்குரிய இலங்கைவாழ் இந்து மக்கள் அனைவருக்கும் உன்னதமான இந்த விஜயதசமி நன்னாளிலே நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதிலே மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

மனிதக் குலத்திற்கு அடிப்படையான வீரம், கல்வி, செல்வம் ஆகிய மூன்றையும் அள்ளி வழங்குகின்ற மாபெரும் சக்திகளான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி ஆகிய நம் தாய்த் தெய்வங்களுக்கு, நமது நன்றியையும் வணக்கத்தையும் வேண்டுதலையும் தெரிவிக்கும் விரதமாக நவராத்திரி விரதம் அமைகின்றது.

இந்நோன்பு நிறைவிலே வெற்றித் திருநாளாம் விஜயதசமித் திருநாளன்று ஆரம்பிக்கப்படும் நற்காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன், விஜயதசமி திருநாளை மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கின்றமை அதன் சிறப்பம்சமாகும்.

நம் அனைவரையும் காக்கின்ற இறைசக்தி இந்த துன்பத்திலிருந்தும் நம்மைக் காத்தருளும் என்று நாம் அனைவரும் நம்புவோம்.

இறை நம்பிக்கையை வளர்த்துக் கொள்வோம். இந்நவராத்திரி நாளிலே நாடு நலம் பெற அனைவரும் ஒன்று சேர்ந்து பிரார்த்திப்போம்.

சிறப்பு வாய்ந்த இந்தப் புண்ணிய காலத்தில் அன்னையின் அருளால் இலங்கை வாழ் மக்கள் அனைவரும் அனைத்து நலன்களையும் வளங்களையும் பெற்றுச் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட இறை ஆசி வேண்டி வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US