பிரதி சபாநாயகரின் பதிலால் நாடாளுமன்றில் குழப்பம்
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகரிடம் கேட்ட கேள்விகளுக்கு, அவர், நன்றி என்பதன் சிங்கள வார்த்தையான போமஸ்துதி என்று சிங்களத்தில் தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தமையால் அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
சீனாவிலிருந்து கரிம உரங்கள் ஏற்றுமதி மற்றும் இந்தியாவில் இருந்து நனோ நைட்ரஜன் உரங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாதப்பிரதிவாதங்கள் நிகழ்த்தப்பட்டன.
இதன்போது நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளார்.
சீன கரிம உரத்தினால் நட்டம்
இந்திய உரக்கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்தியாவின் குஜராத்தில் இருந்து பெறப்பட்ட நனோ நைட்ரஜன் திரவ உரத்திற்கு அதிக விலை கொடுத்து 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டமேற்பட்டது.
இலங்கையின் கரையை எட்டாத சீனாவின் கரிம உரத்தால், 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் கேள்விகளுக்கு அரசாங்கம் சரியான பதிலை வழங்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனினும் பிரதி சபாநாயகர் தொடர்ந்தும் 'நன்றி' என்ற போமஸ்துதி என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் கூறியுள்ளார்.
இதன்போது கருத்துரைத்த எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல,
கேள்விகள் கேட்கப்படும்போது எல்லாவற்றுக்கு நன்றி என்று கூறுவதைக்காட்டிலும்
கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
