மொட்டு அரசுக்குள் மீண்டும் குழப்பம்! முக்கிய தருணத்தில் வெளியேற காத்திருக்கும் உறுப்பினர்கள்
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிலர், முக்கியமான தருணத்தில் அரசில் இருந்து விலகவுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆட்சியின் கீழ் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகள் பகிரப்பட்ட விதம் தொடர்பாக இவர்கள் ஆரம்பத்தில் இருந்தே அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
இதன் பின்னர் அரசு பின்பற்றிய கொள்கை தொடர்பாகவும் இவர்களுக்கு அதிருப்தி இருந்து வந்துள்ளது.
இந்தநிலையில், அண்மைக்காலமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இவர்களின் அதிருப்தியை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது எனவும் கூறப்படுகின்றது.
அதேவேளை, அரசில் அங்கம் வகிக்கும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்க முடிவு செய்துள்ளனர்.
இவர்கள் அடுத்த வாரம் ஜனாதிபதியைச் சந்தித்து தமது
முடிவு குறித்து ஜனாதிபதியிடம் அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
