யாழ்.தையிட்டியில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் முரண்பாடு!
யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த போராட்டமானது நேற்றையதினமும் (13) இன்றும் (14) வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முரண்பாடு
இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே இதன்போது முரண்பாடும் ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டதோடு, அதன்பின்னர் நிலை சுமூகமானதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |