ஜனாதிபதி கோட்டபாயவிடம் கையளிக்கப்படவுள்ள தமிழர் ஒருவரின் இரகசிய அறிக்கை
முறைகேடான வகையில் வெளிநாடுகளில் சொத்துக்களைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வரர்கள் தொடர்பில் பண்டோரா ஆவணம் அம்பலப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பண்டோரா அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவன் திருக்குமார் நடேசன் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
அது தொடர்பான இடைநிலை அறிக்கை ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வழங்குவதற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் செயலானர், அந்த விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருக்குமார் நடேசனின் வங்கி கணக்குகள் மற்றும் அரச நிறுவனங்கள் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட ஆவணங்களை விசாரணைக் குழு அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, சிறைச்சாலையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவிடமும் பண்டோரா ஆவணம் தொடர்பான தகவல்கள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
