பிரித்தானிய மாநில வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகார அமைச்சரை சந்தித்து பேசிய கூட்டமைப்பு.
பிரித்தானிய மாநில வெளி விவகார பொது நலவாய மற்றும் அபிவிருத்தி விவகார அமைச்சர் லோர்ட் தாரிக்கிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனும்(M.A.Sumanthiran), இரா.சாணக்கியனுக்கும்(Shanakiyan) இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது தமிழ் பேசும் மக்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் மீதான தற்போதைய அரசாங்கத்தின் தாக்குதல்கள் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அரசியலமைப்பு மற்றும் தற்போதைய சில சட்ட நடவடிக்கைகளைத் திருத்த வேண்டியதன் அவசியம் போன்ற பல விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த இராஜதந்திர விஜயமானது தமிழ் மக்களின் பிரச்சனையை அடுத்த கட்டத்துக்கு
நகர்த்துவதும், எமக்கான உரிமையினை மிக விரைவில் பெறக்கூடிய வழிமுறைகளை
ஒருங்கமைத்தலுமாகும் என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam