இலங்கை முழுவதும் அதிகமாக விற்பனை செய்யப்படும் ஆணுறைகள்: குடும்பக் கட்டுப்பாடு சங்கம் தெரிவிப்பு!
இலங்கை முழுவதும் ஆணுறைகள் தீவிரமாக விற்பனை செய்யப்படுவதாக குடும்பக் கட்டுப்பாடு சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நேற்றைய தினம் (27.03.2023) குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷாரா ரணசிங்க தகவல் தெரிவித்துள்ளார்.
மருத்துவச்சிகள் மூலம் ஆணுறைகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் ஒரு வழிமுறையும் அரசாங்கத்திடம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருந்தகங்களில் கொள்வனவு
குறைந்த அளவிலான ஆணுறைகள் கிராமப்புறங்களில் விற்பனையாவதாகவும், நகர்ப்புறங்களில் உயர்தர தயாரிப்புகள் விற்பனையாவதாகவும் ரணசிங்க கூறியுள்ளார்.
மேலும், ஆணுறைகள் கர்ப்பத்திலிருந்து மட்டுமல்ல, பாலியல் ரீதியாகப் பரவும் நோய்களிலிருந்தும் பாதுகாப்பைத் தருகின்றன.
ஆணுறைகள் நமது இளைஞர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் மிகவும் சக்திவாய்ந்த முறைகளில் ஒன்றாகும். எனினும் கலாச்சார நம்பிக்கைகள் காரணமாகச் சிலர் மருந்தகங்களில் ஆணுறைகளைக் கொள்வனவு செய்வதற்குத் தயங்குகின்றனர் என்று துஷாரா ரணசிங்க கூறியுள்ளார்.
அனுமதி பெறுவதில் சிக்கல்
இது இயல்புக்கு வருவதற்கு சிறிது காலம் செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆணுறை விற்பனை இயந்திரங்களை நிறுவ தொடருந்து நிலையங்கள் மருத்துவமனைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. எனினும் அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெறுவதில் சிக்கல் இருந்தது.
ரணசிங்கவின் கூற்றுப்படி, இலங்கை, கிட்டத்தட்ட 68 சதவீத கருத்தடை பரவல்
வீதத்தைக் கொண்டுள்ளது மற்றும் பிராந்தியத்தில் மிக உயர்ந்த நிலையாகும்
என்றும் துஷாரா ரணசிங்க தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
