இரட்டை யானை குட்டிகளை நீராட அழைத்து சென்றமைக்கு கண்டனம்
இலங்கையின் இரட்டை யானைக்குட்டிகள் நீராடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சர்வதேச ரீதியில் புகழ் பூத்த பெண் இசைக்கலைஞர் செர் (Cher ) இந்த விவகாரம் தொடர்பில் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அண்மையில் பிறந்த இந்த இரட்டை யானைக் குட்டிகள் முதல் தடவையாக நீராடச் செல்லும் காட்சிகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த காணொளியை பார்வையிட்ட இசைக்கலைஞர் கடும் அதிருப்தியையும்,எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளார்.
ஊடகப் பிரச்சாரத்திற்காக இந்த யானைக் குட்டிகளும் அதன் தாய் யானையும் பலவந்தமாக நீராடச் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
விலங்குகளை பாதுகாக்க வேண்டிய பாதுகாவலர்களே மிருகங்களை வதைப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
யானைகளும் மனிதர்களைப் போன்றவை எனவும் அவற்றின் சுதந்திரத்தை பறிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் சர்மிளா ராஜபக்ச உள்ளிட்ட அதிகாரிகளின் செயற்பாடு குறித்து கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றாடல் மற்றும் விலங்குகளை பாதுகாக்கும் (RARE) என்ற அமைப்பும் இந்த சம்பவம் தொடர்பில் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 7 மணி நேரம் முன்
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்