விமல் வீரவன்ஸ மீது குற்றப்புலனாய்வுத் துறையில் முறைப்பாடு செய்த ரிஷாத்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் இன்று அமைச்சர் விமல் வீரவன்ஸவின் மீது குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
அமைச்சர் வீரவன்ச நேற்று வெளியிட்ட பகிரங்க அறிக்கைக்கு எதிராகவே ரிசாத் பதியுதீன் தமது முறைப்பாட்டை செய்துள்ளார். 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் உடன் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் இருவரும் தொடர்பு கொண்டிருந்ததாக வீரவன்ச நேற்று கூறியிருந்தார்.
இந்தநிலையில் தமது முறைப்பாட்டை பதிவுசெய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரிசாத் பதியுதீன், தனக்கு சஹ்ரான் ஹாஷிமைத் தெரியாது என்றும், இதற்கு அவரை தாம் சந்திக்கவில்லை என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.
அமைச்சர் வீரவன்ஸ தனது தனிப்பட்ட அரசியல் நலனுக்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக முன்னாள் அமைச்சர் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளார்.