முல்லைத்தீவு கடலில் இந்திய இழுவை படகுகள் காணப்படுவதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
முல்லைத்தீவு கடலில் கடந்த இரண்டு நாட்களாக இந்திய இழுவைப்படகுகள் தொடர்ச்சியாக காணப்படுகின்றமை குறித்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் மாவட்ட கடற்தொழிலாளார் சங்கங்களின் சம்மேளன தலைவர் வி.அருள்நாதன் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளார்.
இது தொடர்பில் இன்று(09) முறைப்பாடு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய,''இவ்விடயத்தை கட்டுப்படுத்த கடற்படையினர் மற்றும் கடற்தொழில் நீரியல்வள திணைக்களம் கடற்தொழில் அமைச்சிற்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
மண்ணெண்ணை இல்லாத நிலையில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் கடந்த மூன்று மாதங்களாக கடலுக்கு செல்லமுடியாத நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரச திணைக்களங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இலங்கை கடல்வளத்தினை இந்திய கடற்தொழிலாளர்கள் சுறண்டி சென்று கொண்டிருக்கின்றார்கள்.எங்கள் நாட்டின் கடல்வளத்தினை நாங்கள் பாதுகாக்கவேண்டும்.
தங்கள் கடற்தொழிலாளர்கள் கடலுக்கு சென்ற மீன்பிடிக்க முடியாத நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக முல்லைத்தீவு மாவட்ட கடலிற்சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்பகுதியில் நூற்றுக்கணக்கான இந்திய இழுவைப்படகுகள் கடல் வளத்தினை சூறையாடி வருகின்றன’’ என முறைப்பாடு செய்துள்ளார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
