பரீட்சை வினாத்தாள்களை கசியவிட்ட இலங்கை கிரிக்கெட் நடுவர்கள் குழு: பதியப்பட்ட குற்றச்சாட்டு
இலங்கை கிரிக்கெட் நடுவர்கள் குழு, கடந்த வருட நடுவர் பரீட்சை வினாத்தாள்களை கசியவிட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையின் தரம் 4 நடுவர் சந்தன கன்னங்கர இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
100க்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகளைக் கொண்ட நான்காம் தர நடுவர்களை தரம் 3 க்கு தரத்துக்கு உயர்த்துவதற்கான பரீட்சையை இலங்கை கிரிக்கெட் சபை கடந்த வருடம் நடத்தியது.
அதிகாரப்பூர்வ தேர்வு
இதன்போது முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் நடுவர் மற்றும் இலங்கை கிரிக்கெட் நடுவர்கள் குழுவின் உறுப்பினர் ஆகிய இருவரும், பரீட்சைக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் பரீட்சைக்கு தோற்றிய நடுவர்களிடம் 60 கேள்விகள் அடங்கிய தாள் ஒன்றை கசியவிட்டதாக கன்னங்கரா குற்றம் சுமத்தியுள்ளார்.
கசிந்த தாளில் இருந்து 25 கேள்விகள் அதிகாரப்பூர்வ தேர்வில் உள்ளடக்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பரீட்சையைத் தொடர்ந்து இருபத்தைந்து நடுவர்கள் பதவி உயர்வு பெற்றனர். இருப்பினும், இதில் 30க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் 98 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
இன்னும் சிலர் தகுதி பெறத் தவறியுள்ளனர். வினாத்தாள் கசிந்திருப்பது இது முதல் நிகழ்வு அல்ல. எனினும் முன்னர் ஒரு சிலருக்கு மட்டுமே இந்த அணுகல் இருந்தது இந்ததடவை, குறைந்தபட்சம் 25 விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு முன்னதாக வினாக்களைப் பெற்றுள்ளனர்.
வினாத்தாள் கசியாத நிலையில், முன்னணி நடுவரான குமார் தர்மசேன கூட 98 மதிப்பெண்களைப் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் - மாலை திருவிழா





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
